தமிழ்நாடு செய்திகள்
சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரெயில் இயக்குவதில் தாமதம்... தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
- பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நீண்ட தூரம் பயணிப்பதற்காக ரெயில் சேவையை பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இயக்கப்படும் ரெயில்கள் பராமரிப்பு பணி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவது அல்லது நேரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பிற்பகல் 3 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படுவதால் பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.