தமிழ்நாடு செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பின் போது இருபிரிவினர் இடையே வாக்குவாதம் - காஞ்சிபுரத்தில் சலசலப்பு

Published On 2025-01-10 06:48 IST   |   Update On 2025-01-10 07:18:00 IST
  • ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
  • பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்கள் மற்றும் பரமபத வாசல் உள்ள கோவில்களில் எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில், இன்று (ஜனவரி 10) அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இருபிரிவினருக்கும் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு தலா பத்து நிமிடங்கள் ஒதுக்கீடு செய்தனர்.

Tags:    

Similar News