தமிழ்நாடு செய்திகள்
பாலியல் வன்கொடுமை வழக்கு: கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!
- கடந்த 2021ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
- இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது.
பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.