தமிழ்நாடு செய்திகள்
தாய், மகளுடன் உறவு - பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்கு வலுக்கும் கண்டனம்
- தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?
- மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா?
இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், "பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதற்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதாரத்தை வழங்கவில்லை என்றால் நாளை (ஜனவரி 9] காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.