தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் இன்று உயர்நிலைப் பள்ளிகள் இயங்கும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
- பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும்.
சென்னையில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.