தமிழ்நாடு செய்திகள்

தடையை மீறி போராட்டம்- சீமான் கைது

Published On 2024-12-31 11:30 IST   |   Update On 2024-12-31 11:30:00 IST
  • ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
  • தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார்.

இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News