சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- ஆய்வு மையம் கணித்தபடி வட மாவட்டங்களில் காலை வரை மழை பெய்தது.
- விழுப்புரம், கடலூரில் பல இடங்களில் மழை பொழிந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக பகுதிகளில் மழையை கொடுக்கும் என ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டதோடு, நிர்வாக ரீதியாக இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆய்வு மையம் கணித்தபடி வட மாவட்டங்களில் காலை வரை மழை பெய்தது. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூரில் பல இடங்களில் மழை பொழிந்தது. ஆனால் சென்னையை பொறுத்தவரையில் காலை வரை 4 இடங்களில் கனமழையும், 41 இடங்களில் மிதமான மழையும், 9 இடங்களில் லேசான மழையும் பதிவானது. ஆனால் அதன் பிறகு வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விடுமுறை விடப்படுமா? என எதிர்பார்த்த நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.