சாம்சங் தொழிலாளர்கள் சம்பள உயர்வு- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
- சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தினர்.
சாம்சங் நிர்வாகத்திற்கு, தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது.
தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக, சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும், தொழிலாளர்களும் சமரசமாகினர்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சிவி. கணேசன் தலையில் சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்துறை மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 5 நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.