தமிழ்நாடு செய்திகள்
null

ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

Published On 2025-04-23 01:56 IST   |   Update On 2025-04-23 05:17:00 IST
  • ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் இதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

Tags:    

Similar News