தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது: சச்சின் பைலட்

Published On 2026-01-17 05:30 IST   |   Update On 2026-01-17 05:30:00 IST
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் சென்னை வந்துள்ளார்.
  • நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் சச்சின் பைலட்.

சென்னை:

காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது.

பாரம்பரியமாக தமிழகத்தில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது.

காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பல முயற்சிகளைச் செய்தாலும் ஒருபோதும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

பா.ஜ.க.வை எதிர்க்க எப்போதும் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்படும்.

என்ன நடந்தாலும் வருங்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது.

நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News