தமிழ்நாடு செய்திகள்

ரிதன்யா மரணத்திற்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் கடைகள் அடைப்பு - வியாபாரிகள் அறிவிப்பு

Published On 2025-07-05 13:42 IST   |   Update On 2025-07-05 13:42:00 IST
  • ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
  • ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் அவிநாசி அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ரிதன்யாவின் உருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கை விரைவில் முடித்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது. வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News