தமிழ்நாடு செய்திகள்

76வது குடியரசு தினம்: அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம் - த.வெ.க. விஜய்

Published On 2025-01-26 11:47 IST   |   Update On 2025-01-26 12:20:00 IST
  • 76வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • மாநிலங்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றினர்.

நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், த.வெ.க. தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தய குடியரசு தினத்தில், அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News