தமிழ்நாடு செய்திகள்
ரெட் அலர்ட் எதிரொலி- நீலகிரியில் சுற்றுலாத்தலங்கள் மூடல்
- சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.
நீலகிரிக்கு நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.
அதன்படி, உதகையில் 2 நாட்கள் படகு சவாரி சேவையும், 3 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
மேலும், பைன் மரக்காடுகள், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனிமழையின்போது மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.