தமிழ்நாடு செய்திகள்
null

நவம்பரில் வரலாறு காணாத வெப்பம்.. மழை எப்போ? - வெதர்மேன் கணிப்பு

Published On 2025-11-01 06:18 IST   |   Update On 2025-11-01 06:21:00 IST
  • வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது.
  • இது முந்தைய காலங்களில் இல்லாத சாதனை அளவாகும்.

வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது.

காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று, சென்னையில் அதிகபட்சமாக 35.5 செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலங்களில் நவம்பர் 1 அன்று இல்லாத இல்லாத சாதனை அளவாகும்.

வெப்பநிலை உயர்ந்தபோதிலும் மழைக்காக அறிகுறிகளையும் வெதர்மேன் கணித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உட்படத் தமிழ்நாட்டில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்.

மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழை ஆக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News