தமிழ்நாடு செய்திகள்
ரமலான் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர வாழ்த்துகிறேன் - விஜய்
- உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
- இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி..., ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும்,
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.