தமிழ்நாடு செய்திகள்
ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம்- வைகோ
- மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.
ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம் என்று மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது.
ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.
அதன்படி, 2026 தேர்தலில் குறைந்சபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளேன்" என்றார்.