தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வில் தேசிய அளவில் 27ஆவது இடத்தை பிடித்த தமிழக மாணவன்: மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி

Published On 2025-06-14 15:12 IST   |   Update On 2025-06-14 15:12:00 IST
  • உத்தர பிரதேசத்தில் தேர்வு எழுதியதில் 1.70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • முழு மதிப்பெண் எந்த மாணவனும் பெறவில்லை.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720-க்கு 686 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வருடம் யாரும் 700 மதிப்பெண்ணை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்நத் உத்கார்ஷ் அவாதியா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

இந்த வருடம் 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 12.36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். என்றாலும் கடந்த வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது குறைவாகும். ஆனால் கடந்த வருடம் 23.33 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். 13.15 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷாங்க் ஜோஷி, டெல்லியை சேர்ந்த மிரினால் கிஷோர் ஜா முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

தேசிய அளவில் 5ஆவது இடத்தை பிடித்த டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால், மாணவிகளில் வரிசையில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 1.25 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 1.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சூர்ய நாராயணன், தேசிய அளவில் 27 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் 1.35 லட்சம் போர் தேர்வு எழுதிய நிலையில், 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏறக்குறைய 1.08 லட்சம் இடங்கள் உள்ளது. இதில் 56 ஆயிரம் இடங்களில் அரசு கல்லூரிகளிலும், 52 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன.

பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News