தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் மழை- விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, டெல்லி, விஜயவாடா, ஷீரடி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.