தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை- புகழேந்தி

Published On 2025-02-12 14:58 IST   |   Update On 2025-02-13 11:13:00 IST
  • பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது.
  • அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வா.புகழேந்தி கூறியதாவது:-

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என்று ஒரு அருமையான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையாணை நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இனி என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். எனவே பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது. கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது. சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி அவர் ஊர் உலகத்தை ஏமாற்ற வேண்டாம்.

இனி இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்வோம். எனது நோக்கம் எம்.ஜி.ஆர். கொடுத்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது அல்ல. அது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது என்பது

தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை. இது கண்டிக்கத்தக்கது. இந்த பாராட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பவர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வீட்டிலிருந்து வெளியே எறிந்து விடுங்கள். ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News