தமிழ்நாடு செய்திகள்

பி.டி.ஆரின் ஆதரவாளர் தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்

Published On 2025-05-29 09:55 IST   |   Update On 2025-05-29 11:04:00 IST
  • அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்தை தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மதுரை மேயரின் கணவரான பொன்.வசந்த் மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் அதிகளவில் தலையிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் ஆரம்பத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து தற்போது மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியுடன் இணைந்து அவரது ஆதரவில் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News