தமிழ்நாடு செய்திகள்

SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Published On 2025-11-11 11:12 IST   |   Update On 2025-11-11 11:12:00 IST
  • சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூ. முன்னாள் மாநில செயலாளர் முத்தரசனும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்று கோஷமிட்டனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

திருவள்ளூரில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பி. சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

Tags:    

Similar News