தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் தமிழகம் வருகை- ஹெலிபேட் இடமாற்றம்

Published On 2025-07-25 22:17 IST   |   Update On 2025-07-25 22:17:00 IST
  • கங்கை கொண் சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல்.

தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை (சனிக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.

தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News