தமிழ்நாடு செய்திகள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. மாநாடு: பிரேமலதா

Published On 2025-08-25 13:41 IST   |   Update On 2025-08-25 13:41:00 IST
  • பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
  • மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

சென்னை:

தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க.வின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 2.45 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News