தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
- தற்போது புதியதாக நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்து தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர்.
- திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டதால் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.