தமிழ்நாடு செய்திகள்
பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழா - தலைவர்கள் புகழாரம்
- போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.
- பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிறப்பினை போற்றி வணங்குவோம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையானவராக, முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தராக, போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட தரணி புகழ் வீரன், தோல்வியே காணாத மாமன்னர் நம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவில், அவரது சிறப்பினைப் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.