தமிழ்நாடு செய்திகள்

ராமதாசை சந்திக்க நிர்வாகிகள் வருகை- தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

Published On 2025-09-16 11:54 IST   |   Update On 2025-09-16 11:54:00 IST
  • ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
  • தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தபோது அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு 2 முறை அவகாசம் கொடுத்தும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து நேற்று பா.ம.க. மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக டாக்டர் அன்புமணி தரப்பினர் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்கு முக்கிய நிர்வாகிகள் தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News