தமிழ்நாடு செய்திகள்

ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்- காவல் ஆய்வாளர் கைது

Published On 2025-04-04 12:17 IST   |   Update On 2025-04-04 12:38:00 IST
  • நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
  • காவல் ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெபபோலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியுள்ளார்.

இதனால், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டிய நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், லஞ்சம் புகாரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News