தமிழ்நாடு செய்திகள்

தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்புமணி ராமதாஸ்..!

Published On 2025-07-10 20:21 IST   |   Update On 2025-07-10 20:21:00 IST
  • டாக்டர் ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளார்.
  • இந்த நேரத்தில் அன்புமணி தாலாபுரம் இல்லம் சென்றுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் தலைவர் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மோதலை முன்னிட்டு இருவரும் சந்திக்காமல் உள்ளனர். ராமதாசின் 60ஆவது கல்யாணம் விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது கூட அன்புமணி, தைலாபுரம் இல்லத்திற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் இன்றிரவு அன்புமணி, தைலாபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார். தாயாரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் மயிலாடுதுறை சென்றுள்ளார். இந்தவேளையில்தான் அன்புமணி அங்கு சென்றுள்ளார்.

Tags:    

Similar News