தமிழ்நாடு செய்திகள்
2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
- இன்றிரவு தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
- நாளை மறுநாள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடிதிருவாதிரை விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்திய பிரதமர் மோடி மாலத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து இன்று இரவு விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை இன்று இரவு திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நாளை மறுநாள் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடிதிருவாதிரை விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிறகு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.