சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டம் - மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
- பிங்க் ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
- மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாடு அரசு பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள் போன்ற பல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பாக 'பிங்க்' ஆட்டோக்களை தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் பிங்க் ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இந்நிலையில், பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவசரக் காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும், ஜிபிஎஸ் மற்றும் VItd எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொறுத்தப்படவுள்ளது.
மார்ச் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.