தமிழ்நாடு செய்திகள்
திருச்செந்தூர் குடமுழுக்கு- தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க உத்தரவு
- தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிணை ஆணை பிறப்பித்துள்ளது.
- தமிழில் வேள்வி நடத்த செயல்திட்டம் வகுக்கவும் ஆணை.
வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்று தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில், திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கோவில்களின் குடமுழுக்கின்போது தமிழில் வேள்வி நடத்த செயல்திட்டம் வகுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிணை ஆணை பிறப்பித்துள்ளது.