நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
- நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
- மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்குச் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஓ.பி.ரவீந்திரநாத், இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன் என பதிவிட்டுள்ளார்.