தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்?

Published On 2025-07-24 20:17 IST   |   Update On 2025-07-24 20:17:00 IST
  • தூத்துக்குடி விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.
  • தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம்.

தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News