தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
- அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாக பதிவு செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில் இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்துள்ளது.