இரவு விசாரணை இல்லை.. திருப்பரங்குன்றம் வழக்கை நாளை காலை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
- சிஐஎஸ்எப் படையினரை இந்துத்துவா அமைப்புக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜிஆர் சுவாமிநாதம் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என கூறி அனுப்பினார்.
- 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் மலையுச்சியுள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என இந்துத்துவா அமைப்பு நபர் தொடந்த வழக்கில் மதுரை கிளை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் வழக்கப்படி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உய்ரநீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் படையினரை இந்துத்துவா அமைப்புக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜிஆர் சுவாமிநாதம் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என கூறி அனுப்பினார்.
ஆனால் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அவர்களை தடுக்கவே சிஐஎஸ்எப் வீரர்கள் திரும்பிச்சென்றனர். ஆனால் இந்துத்துவா அமைப்பினர் மலையடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுத்தப்பட்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவலர்கள் ரத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தை இன்று மீண்டும் கையில் எடுத்த மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், நீதிமன்ற அவமதிப்பு என கூறி, இன்று மலையில் தான் சொன்ன இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டார். இதை காரணம் காட்டி மலையேற முயன்ற இந்துத்துவா அமைப்பினருடன் கூட்டு சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டோர் கைதாகினர். இன்றும் தீபம் ஏற்றப்படாததால் இந்த வழக்கை இன்று இரவு 10.30 மணிக்கே விசாரிக்க உள்ளதாக மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்றைய உத்தரவு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில், 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.
2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.
புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.