தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்- ரேசில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல்

Published On 2025-01-01 14:52 IST   |   Update On 2025-01-01 14:52:00 IST
  • ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தல்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை காவல்துறை பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

குறிப்பாக, பைக் வீலிங், ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட போலீசார் தடை விதித்திருந்தனர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலையில் ரேஸ் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பைக்குகளுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News