தமிழ்நாடு செய்திகள்

வடபழனியில் புதிய ஸ்கை வால்க் - மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2025-05-25 18:35 IST   |   Update On 2025-05-25 18:35:00 IST
  • ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது
  • இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் அமைகிறது.

வடபழனியில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையில், ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது

இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி மற்றும் இரும்பினால் அமைகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான பணிகளை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், SKY WALK-ன் மாதிரி படங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் என 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் வரவுள்ளது. 3 ஆவது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4 ஆவது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5 ஆவது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News