தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன- அமைச்சர் சிவசங்கர்
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
- சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பாக பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் உத்தரவிட்டபடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தும், கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்தும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். இன்று கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.
தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.