தமிழ்நாடு செய்திகள்

கோவில்பட்டி: கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-28 21:44 IST   |   Update On 2025-10-28 21:44:00 IST
  • தென்காசி, கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார்.
  • விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது.

இதற்கிடையே, தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அங்கு நூலகத்தையும் திறந்துவைத்தார்.

இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News