தமிழ்நாடு செய்திகள்

பிரேசில் ஜாம்பவான்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி: தமிழ்நாடு பெருமிதத்தோடு ஆர்ப்பரித்தது- மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-31 12:53 IST   |   Update On 2025-03-31 12:53:00 IST
  • பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
  • பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.

சென்னை:

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த காட்சி கால்பந்து போட்டியில் பிரேசில் ஜாம்பவான்கள்-ஆல் ஸ்டார் இந்தியா அணிகள் மோதின. இதில் பிரேசிலின் ஜாம்பவான்களான ரொனால்டினோ, ரிவால்டோ, எட்மில்சன், காபு உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடினார்கள். இந்த போட்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பெருமிதத்தோடு நேற்று இரவு ஆர்ப்பரித்துள்ளது. ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி, நினைவில் கொள்ளத்தக்க, அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இப்போட்டி அமைந்திருந்தது. பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News