தமிழ்நாடு செய்திகள்

4 ஆண்டு காலத்தில் ரூ.10 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்ப்பு- மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-29 10:47 IST   |   Update On 2025-08-29 10:47:00 IST
  • பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
  • நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.

சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ.

* என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர்.

* தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.

* பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

* வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

* பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.

* இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.

* ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News