தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
- தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
தருமபுரி:
தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தருமபுரியின் வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில் தான். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தருமபுரி தொழிற்பேட்டை தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
* இணையத்தில் விண்ணப்பித்த அன்றே விவசாய கடன் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
* இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* வேளாண்மையின் மைந்தனாகவும் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
* கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
* தருமபுரியில் பேருந்து வசதி இல்லாத 8 கிராமங்கள் போக்குவரத்து வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புதிய பேருந்துகள் இயக்கம்.
* தருமபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.
* தருமபுரி சிப்காட் பூங்கால் தொழில்முனைவோருக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
* 63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும்.
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* புளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரியில் ரூ.11 கோடியில் புளி வணிக மையம் அமைக்கப்படும்.
* ஒகேனக்கல்- தருமபுரியை இணைக்கும் சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றார்.