தமிழ்நாடு செய்திகள்

தமிழக அணிவகுப்பு ஊர்தி- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்

Published On 2024-12-23 13:18 IST   |   Update On 2024-12-23 13:18:00 IST
  • நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றவில்லை.
  • அரசியல் நடைமுறை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது வெட்கக்கேடான நிலை என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவுக்கு அமைச்சர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* தலைநகரில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறது.

* 2 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் 3-வது ஆண்டில் அனுமதிக்கக்கூடாது.

* 2023-24-ல் பங்கேற்ற தமிழக அரசின் ஊர்திகள் இனி 2026-ல் தான் பங்கேற்க முடியுமென்பதே மத்திய அரசின் நடைமுறை.

* நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றவில்லை.

* உ.பி., குஜராத்திற்கு தொடர்ந்து 3-வது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயம் அற்ற செயல்.

* அரசியல் நடைமுறை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை.

* அரசுக்கு ஆக்கப்பூர்வ யோசனை, கருத்துகளை கூறி எதிர்க்கட்சி தலைவர் பதவிக்குரிய மரியாதையை இபிஎஸ் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News