தமிழ்நாடு செய்திகள்
தொடர்ந்து 4-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
- அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.