தமிழ்நாடு செய்திகள்
வருகிற 26-ந் தேதி, 1-ந் தேதிகளில் மேட்டுப்பாளையம் அதிவிரைவு ரெயில் பகுதி நேர ரத்து
- கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நீலகிரி அதிவிரைவு ரெயில் கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
சென்னை:
கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 26, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.12671), கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.