தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் துரை வைகோ எல்.கே.ஜி.தான்- மல்லை சத்யா

Published On 2025-07-17 09:40 IST   |   Update On 2025-07-17 09:40:00 IST
  • பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.
  • ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.

சென்னை:

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும்.

அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.

துரை வைகோ அரசியல் பால பாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்.கே.ஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.

எனவே, ம.தி.மு.க.வை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத் தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, ம.தி.மு.க.வுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News