மதுரை பாதாள சாக்கடை பணிகள் - அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
- கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மதுரை நகரப்பகுதிகளில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை புறநகரில் ரூ.2,000 கோடி, மாநகர பகுதியில் ரூ.1,500 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடைபெறுகிறது.
வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.