அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
- காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
- காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.