பங்கு சந்தை வர்த்தகத்தில் நஷ்டம்: 2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்று தொழிலதிபர் தற்கொலை
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
- வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.
ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.
வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.