தமிழ்நாடு செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: விலைப்பட்டியலை சமர்ப்பித்த டெல், ஏசர்

Published On 2025-08-12 16:54 IST   |   Update On 2025-08-12 16:54:00 IST
  • டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
  • ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.

அதன்படி பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

2025-26 தமிழக பட்ஜெட்டில் கல்லூரி மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிப்பட்டது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்தார்.

Tags:    

Similar News